
தசாவதாரம் சி.ஜி. அனுபவத்தைப் பகிர்ந்த கார்த்திக் ராஜு
படத்திலும் பிரம்மாண்டமான பல காட்சிகள் அமைந்து ரசிகர்களை வியக்க வைத்தது. அதற்கு சி.ஜி. என்கிறது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பமும் ஒரு காரணம். 13 வருடங்களுக்கு முன்பு ஒரு தரமான சி.ஜி.யாக அப்படத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் சி.ஜி. சூப்பர்வைசர் ஆக இப்போது இயக்குனராக இருக்கும் கார்த்திக் ராஜு பணியாற்றி இருக்கிறார்.
|
“திருடன் போலீஸ், உள்குத்து” ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. தற்போது கண்ணாடி, சூர்ப்பனகை, த சேஸ் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். தசாவதாரம் படம் பற்றிய அவரது அனுபவத்தை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “தசாவதாரம் 13 வருடங்கள், படத்தின் முதல் 40 நிமிட பிரம்மாண்ட விஷுவல் காட்சிகளில் பணியாற்றியது மிகவும் பெருமை. ஒவ்வொரு சி.ஜி.காட்சியும் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. கற்றுக் கொண்ட மிகப் பெரும் அனுபவம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
|


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!