
லயன் கிங் அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ்
இந்த நிலையில தற்போது லயன் கிங் வரிசையில் "முபாசா : தி லயன்" என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சிம்பாவின் தந்தை முபாசாவின் வாழ்க்கை கதை இடம் பெறுகிறது. "லயன் கிங்" கதையில் முபாசா சூழ்ச்சியால் கொல்லப்பட்டு விடுவார். பின்னர் சிம்பா ஆட்சிக்கு வருவார்.
இந்த படம் முபாசாவின் வீர தீர சாகசங்களை சொல்லப்போகிறது. அநாதையான முபாசா எப்படி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார் என்பதும், அதற்காக அவர் நடத்திய போராட்டங்கள், சந்தித்த துரோகங்கள்தான் திரைக்கதை. இப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.
லயன் கிங் படத்தின் ரசிகர்கள் மத்தியில் "முபாசா: தி லயன் கிங்" படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!