மகாநதியை விட பிடித்திருக்கிறது: சித்தாவுக்கு கமல் பாராட்டு
செப் 30, 2023
Advertisement
சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடித்துள்ள சித்தா படம் கடந்த 28ம் தேதி வெளியானது. குழந்தைகள் பாலியல் வன்கொடுமை பற்றிய இந்த படத்திற்கு பரவலான பாராட்டுகள் கிடைத்து வருகிறது. தற்போது கமல்ஹாசனும் இந்த படத்தை பாராட்டி உள்ளார். சிறப்பு திரையிடலாக படத்தை பார்வையிட்ட கமல்ஹாசன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:
"சித்தா" படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு என்னதான் அம்மா சொல்லிக் கொடுத்தாலும், அவர்களின் மனதில் பதியும்படி இருக்க வேண்டுமென்றால் கதை சொல்ல வேண்டும். எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்னவென்றால், இறுதியில் அழுத்தத்துடன் வெளியே வராமல், இப்படியெல்லாம் நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். பெண் குழந்தை, ஆண் குழந்தையெல்லாம் தாண்டி குழந்தைகளாகவே அவர்களை பார்க்க வேண்டும்.
இந்த படத்தில் இயக்குநருக்கு முக்கியமான பாராட்டு என்றால், விபத்தை விவரிக்கும்போதே மூளை எப்படி சிதறியது தெரியுமா என விவரிப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல், ஒரு கொலையை கேமராவை காட்டாமல் முதல் தகவல் அறிக்கையை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல திரைக்கதை ஆசிரியர்கள் ரசிகர்களின் மனதில் ஊன்றி நடக்க வேண்டும். ஊன்றிய இடத்தில் தடம் பதிய வேண்டும். அப்படி நிறைய தடங்கள் இருக்கிறது. படக்குழுவின் இன்ஸ்பிரேஷன் "மகாநதி" என்றால் எனக்கு அதைவிட இது பிடித்திருக்கிறது. வசூல் ரீதியாக படம் வெற்றிபெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என பேசியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…