
அமெரிக்காவில் 1500 தியேட்டர்களில் வெளியாகும் லியோ
ஜூன் 13, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் அவருடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படத்திற்கான பிசினஸ் விறுவிறுப்பாக நடக்கிறது. மேலும் உலகம் முழுக்க அதிகளவில் வெளியிடவும் திட்டமிட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக லியோ படத்தை அமெரிக்காவில் 1500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!