
லெனின் சக்சஸ் : கண்ணீருடன் நன்றி சொன்ன பாக்யஸ்ரீ போர்ஸ்
தற்போது "லெனின்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் வெற்றிச் சந்திப்பில் பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், ஒரு காலத்தில் திரையுலகில் தன்னை "அன் லக்" (ராசியில்லாத) நடிகை என்று அழைத்ததால், தான் வருத்தமடைந்ததாகவும் லெனின் படத்தின், வெற்றி அதை மாற்றிவிட்டதாகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசினார்.
தற்போதைய சூழலில், தன்னுடைய சம்பளத்தை 2.5 முதல் 3 கோடி வரை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தி கேட்பதாகத் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு படத்தின் வெற்றியிலேயே அதிரடியாக 1.5 கோடி முதல் 2 கோடி வரை சம்பளத்தை உயர்த்துவது கொஞ்சம் ஓவர்தான் என்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் வட்டத்தில் ஒரு முணுமுணுப்பு எழுந்துள்ளதாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!