
‛லத்தி படத்தின் முதல் பாடல் வெளியானது
அக் 07, 2022
வீரமே வாகை சூடும் படத்தை அடுத்து லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஷால். இதில் விஷால் - சுனைனா இணைந்து நடித்து வரும் படம் லத்தி படத்தை வினோத் என்பவர் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் போலீஸ் கதையில் உருவாகி இருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் ‛தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்" என்று தொடங்கும் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துரை என்பவர் பாடல் வரிகளை எழுத, யுவன் ஷங்கர் ராஜா, விக்கி ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். விஷாலின் அதிரடியான சண்டை காட்சியுடன் இடம்பெற்றுள்ள இந்த பாடல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!