வணங்கான் படத்திற்கு கடைசி நேரத்தில் எழுந்த சிக்கல்
ஜன 10, 2025
Advertisement
சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி என தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கியவர் பாலா. சிறு இடைவெளிக்கு பின் இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛வணங்கான்". அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சமுத்திகனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்த படம் பொங்கலை முன்னிட்டு இன்று(ஜன., 10) வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு கடைசிநேர வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. காரணம் இப்படத்தை ரிலீஸ் செய்ய கேடிஎம் கிடைக்கவில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையால் இந்த சிக்கல் எழுந்தது. பின்னர் தயாரிப்பாளர் அதை சரி செய்ததும் கேடிஎம் அனுமதி கிடைத்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலை 11 மணிக்கு பின் இந்தப்படம் வெளியானது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!