
கட்டிப்பிடிக்காதீங்க.. செல்லமாக உத்தரவு போட்டு மிஷ்கினுக்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன்
பொதுவாகவே மிஷ்கின் தனது அன்பை வெளிப்படுத்துவதற்காக எதிரில் இருப்பவர்களை கட்டிப்பிடிப்பது வழக்கம். அதனை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, “தயவுசெய்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டாம்.. நான் முழுதாக ஆடை அணிந்து இருக்கிறேன்” என்று செல்லமாக உத்தரவு போட்டார் நித்யா மேனன். அதற்கு சம்மதித்த மிஷ்கினும் தனது முகத்தை கீழே இறக்கி காட்ட, நித்யா மேனன் அவரது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்த, பதிலுக்கு மிஷ்கினும் நித்யா மேனனின் கையில் முத்தம் கொடுத்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!