
ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த எல் 2 எம்புரான்
படத்திற்கான முன்பதிவு இன்று ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியத் திரைப்படங்களில் இப்படியான ஒரு மணி நேர முன்பதிவில் "லியோ" படம் 82 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது "எல் 2 எம்புரான்" படம் முறியடித்துள்ளது.
கேரளாவில் மட்டுமே 5 கோடிக்கும் அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் நேரடியாக முன்பதிவு செய்ய ரசிகர்கள் முண்டியத்து ஓடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
தமிழகத்தில் மலையாளப் பதிப்பிற்கான முன்பதிவு மட்டும் ஆரம்பமாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!