
கும்கி மலையாள நடிகருக்கு போக்சோ வழக்கில் ஓராண்டு சிறை
இந்த நிலையில் கடந்த 2022-ல் திருச்சூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை காரில் பின் தொடர்ந்து வந்த நபர் அவர்களுக்கு முன்னால் ஆபாசமாக நின்று தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என அடையாளம் தெரியவந்தது. அப்போது குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீஜித் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு திருச்சூர் விரைவு சிறப்பு நீதிமன்றம் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளதுடன் ரூபாய் 50,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. அந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் இழப்பீடாக சமமாக பகிர்ந்து அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…