ஜூலை 18ல் ஓடிடி தளத்தில் குபேரா ரிலீஸ்
ஜூலை 11, 2025
Advertisement
சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் "குபேரா". தமிழ், தெலுங்கில் தயாராகி ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது.
தமிழில் மிகச் சுமாரான வசூலையும், தெலுங்கில் நல்ல வசூலையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியது. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து குறைந்த லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. தமிழிலும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தால் லாபம் அதிகமாக இருந்திருக்கும்.
இப்படம் அடுத்த வாரம் ஜூலை 18ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் இடம் பெற உள்ளது.
தியேட்டர்களில் வரவேற்பைப் பெறாத சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறுவதுண்டு. அப்படி இந்த "குபேரா" படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!