
நானி படத்தில் இணைந்த கில் படத்தின் வில்லன் நடிகர்!
இந்த படத்தில் நானி உடன் இணைந்து நடித்து வருபவர்கள் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக படக்குழு வைத்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக "கில்" படத்தில் நடித்து பிரபலமான ராகவ் ஜூயல் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இவர் "கில்" படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படமாக "தி பாரடைஸ்" அமைந்திருக்கிறது. அவரது படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது "தி பாரடைஸ்" படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் நானி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!