
குபேரா முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல்
ஜூன் 21, 2025
Advertisement
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க சேகர் கம்முலா இயக்கத்தில் நேற்று பான் இந்தியா படமாக வெளியானது "குபேரா". இப்படத்தின் முதல் நாள் வசூல் 20 கோடியைக் கடந்திருக்கலாம் என டோலிவுட் வட்டார பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட வெளியீட்டிற்கு முன்பு ஆன்லைன் முன்பதிவில் தெலுங்கை விடவும் தமிழில் முன்பதிவு மிகவும் பின்தங்கி இருந்தது. படம் வெளியான பின் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் நிறைய வருவதால் தற்போது தமிழிலும் முன்பதிவு உயர்ந்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
சுமார் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள். படத்திற்கான தியேட்டர் உரிமை வியாபாரம் மட்டும் 70 கோடி வரை நடந்துள்ளதாகத் தகவல். மொத்தமாக சுமார் 130 கோடி வசூலித்தால் ஹிட் பட வரிசையில் இந்தப் படம் இடம் பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இன்றும் நாளையும் வசூல் உயர்ந்தால் தான் அடுத்த வார நாட்களில் இப்படத்திற்கான வசூலும் குறிப்பிடும்படி இருக்கும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!