
மும்பை செல்லும் குபேரா படக்குழு!
ஏப் 21, 2024
தனுஷின் 51வது படமான "குபேரா" படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார்.இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத், திருப்பதி, மும்பை, பேங்காக் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி அன்று மும்பையில் தொடங்குகிறது என தெரிவிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!