துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் கோமலி பிரசாத்
மே 20, 2026
Advertisement
சரண்ராஜ் செந்தில்குமார் என்ற புதுமுகம் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம், "மண்டவெட்டி". நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். "செஞ்சி" எனப்படும் சக்தி வாய்ந்த உள்ளூர் தெய்வத்தை மையமாகக் கொண்ட மர்மமான புராணக் கதையைக் கொண்டு, இந்த படம் தயாராகிறது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படம் குறித்து இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, ""மண்டவெட்டி" திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு உடல் ரீதியாகவும் மாறி வாழ்ந்திருக்கிறார் கோமலி.
மிகுந்த சோர்வு, மனதை உலுக்கும் காட்சிகள் மற்றும் உடல் ரீதியாக கடினமான தருணங்கள் இருந்தபோதிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு அவர் நடித்தார். இந்தக் கதை, தன்னைவிட பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வேதனையையும், மனக்குழப்பங்களையும் மையமாகக் கொண்டது. அதனால் இந்த கதாபாத்திரம் பலவீனம், கொந்தளிப்பு, வலி மற்றும் மீண்டு வரும் மனவலிமை என இவை அனைத்தையும் கோமலி தேர்ந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
சூப்பர் நேச்சுரல் கதையை படம் மையமாகக் கொண்டிருந்தாலும் உணர்வு சார்ந்த உண்மைகளையும் "மண்டவெட்டி" பேசும். பழமைவாதத்தில் இருந்து தன்னையே மீண்டும் கண்டுபிடிக்க முயலும் ஒரு பெண்ணின் கதையே இதன் மையம். அந்தக் கதாபாத்திரத்திற்கு கோமலியின் அற்புதமான நடிப்பை படக்குழுவே வியந்து பாராட்டியது" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!