
ஜெயம் ரவியை இயக்கும் கிருத்திகா உதயநிதி
ஆக 18, 2023
Advertisement
அமைச்சரும், நடிகருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா. ‛வணக்கம் சென்னை" படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பின் ‛காளி" படத்தை இயக்கினார். கடந்தாண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயம் ரவியை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது இறைவன், சைரன் படங்களை முடித்துவிட்டு சீனி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை முடித்ததும் அவர் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!