தனுஷுக்கு ஜோடியாக கியாரா அத்வானி
செப் 05, 2023
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதுதவிர இவர் கைவசம் தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் உள்ளன. இவற்றில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ஹிந்தி படம் "தேரே இஷ்க் மெயின்". ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் தனுஷ், ஆனந்த் எல் ராய் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டனர். தற்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். ‛தேரே இஷ்க் மெயின்" படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்தில் துவங்குவதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!