"ஹோம்பாலே பிலிம்ஸ்" தயாரிக்கும், கே.ஜி.எப்., - 2 படத்தின், "டீசர்" 8ம் தேதி வெளியாகிறது. நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு, ஹோம்பாலே, யுடியூப் சேனலில் டீசர் வெளியாகிறது. பட நிறுவனத்தினர் கூறுகையில், "முதல் பாகத்திற்கு, தாங்கள் தோள் கொடுத்தீர்கள். அப்படம் இந்திய சினிமாவின் அடையாளமானது. இரண்டாவது பாகமும், இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும். இந்த புத்தாண்டு, அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சியை தரட்டும்" என்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!