‛ஒரு கிடாயின் கருணை மனு", ‛சத்ய சோதனை" ஆகிய படங்களை அடுத்து மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த படம் ‛கெணத்த காணோம்". அவருடன் லவ்லி சந்திரசேகர், ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபேக்கா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் ஒரு கிராமத்தின் கோவில் பூசாரியாக யோகி பாபு நடித்துள்ளார். தண்ணீருக்காக தோண்டப்பட்ட கிணறால் ஏற்படும் பிரச்சனை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் தற்போது ஜூன் 15ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!