
ஒரே நாளில் 20 மணி நேரம் உழைக்கும் கீர்த்தி சுரேஷ்!
ஆக 05, 2026
Advertisement
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் "சத்யவான் சாவித்ரி, டோரதி" படங்களில் நடித்திருப்பவர், மலையாளத்தில் "தோட்டம்", ஹிந்தியில் "ரப்தார்", தெலுங்கில் "ரவுடி ஜனார்த்தனா" மற்றும் அனில் ரவிப்புடி இயக்கும் படம் என மூன்று மொழியிலும் பரவலாக நடித்து வருகிறார்.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ""திருமணத்துக்கு முன்பை விட இப்போது நான் ரொம்ப பிசியாக நடித்து வருகிறேன். இரண்டு தெலுங்கு படப்பிடிப்புகளுக்காக ஒரே நாளில் 20 மணி நேரம் தொடர்ந்து உழைத்துள்ளேன். சொல்லப்போனால், அது ஒரு நாள் மட்டும் நடந்த நிகழ்வல்ல. கடந்த சில வாரங்களாகவே பல படப்பிடிப்புகளில் இடைவிடாமல் நடித்து வருகிறேன்.
தற்போது ஹைதராபாத்தில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணைந்து நடிக்கும் மல்டிஸ்டார் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறேன். இதன் சமீபத்திய படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள குண்டூர் காரம் ஹவுஸ் செட்டில் தொடங்கியுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், நானி நடிக்கும் "தி பாரடைஸ்" படத்திற்காக ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாடினேன். அதே நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் "ரவுடி ஜனார்த்தனா" படத்திற்கும் அவ்வப்போது கால்சீட் கொடுத்து நடித்து வருகிறேன். இப்படி சினிமாவில் எப்போதும் பிஸியாக இருப்பதே ஒரு ஆசீர்வாதம்தான்"" என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!