
தனுஷ் 56, சிவகார்த்திகேயன் 27 : ஹரிஷ் கல்யாண் கனெக்ஷன்
நேற்றைய இரண்டு படங்களுக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாணின் கனெக்ஷன் ஒன்று உள்ளது. தனுஷின் 56வது படத்தை இயக்கும் தமிழரசன் பச்சமுத்து, இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடித்த "லப்பர் பந்து" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 2024ல் வெளிவந்த அப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
சிவகார்த்திகேயனின் 27வது படத்தை இயக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடித்த "பார்க்கிங்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். 2023ல் வெளிவந்த அப்படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அது மட்டுமல்லாது சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கு தேசிய விருதுகளை வென்றது.
ஹிரிஷ் கல்யாண் நடித்த படங்கள் மூலம் அறிமுகமான இயக்குனர்களின் இரண்டாவது படங்கள் நேற்று ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருவருக்குமே நேற்று தனது வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தார் ஹரிஷ். இரண்டு இயக்குனர்களும் அதற்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!