
வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
ஏப் 22, 2026
Advertisement
திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் ‛ரவுடி ஜனார்த்தனா" என்ற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அதையடுத்து தற்போது தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோக்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக கிர்த்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த வகையில் தன்னைவிட முப்பது வயது அதிகமான ஒரு நடிகருக்கு ஜோடியாக முதன்முறையாக இணைந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதனால் இந்த படத்தில் அவரது சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2027 சங்கராந்திக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!