போலீசாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
ஆக 31, 2022
Advertisement
விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் தற்போது புதிய படத்தை இயக்க இருக்கிறார் . இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. படத்திற்கு சைரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.
தற்போது இப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர், "இப்படத்தில் கீர்த்தி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளார். ஜெயம்ரவிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . ”என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!