வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின்
மே 19, 2024
Advertisement
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ஒரு சிலர்தான் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்கள். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், காமெடி ஷோவில் நடித்த சந்தானம் ஆகியோரைத் தொடர்ந்து அந்த டிவியில் இருந்து வந்த மற்றொருவர் கவின். இவர் டிவி சீரியலில் இருந்து வந்தவர்.
முதன் முதலில் "சத்ரியன்" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அப்படம் வெற்றி பெறாததால் கவினும் கண்டு கொள்ளப்படவில்லை. அடுத்து "நட்புனா என்னனு தெரியுமா" படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படமும் ஓடவில்லை. ஓடிடி தளத்தில் வெளியான "லிப்ட்" படம் வரவேற்பைப் பெற்றது. கடந்த வருடம் வெளிவந்த "டாடா" படமும் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றது.
கடந்த வாரம் வெளியான "ஸ்டார்" படம் சுமார் 20 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதற்கடுத்து நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் "பிளடி பெக்கர்" படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். அடுத்தடுத்து தயாராக உள்ள இந்தப் படங்களால் வளரும் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் கவின்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!