
மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்
மே 05, 2025
Advertisement
நடிகர் கதிர் தமிழில் பரியேறும் பெருமாள், மதயானைக்கூட்டம், சுழல், கிருமி, ஜடா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடித்து வந்தவர் தற்போது மலையாளத்திலும் நடிகராக அறிமுகமாகிறார். அதன்படி, ‛ஆர்.டி.எக்ஸ்" பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து, கதாநாயகனாக மலையாளத்தில் "ஐ ம் கேம்" எனும் புதிய படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இதில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்தது தொடர்ந்து தற்போது நடிகர் கதிரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் தொடங்கியுள்ளனர். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!