மே 15ல் கருப்பு ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா?
மார் 16, 2026
Advertisement
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் "கருப்பு". இப்படத்தின் டீசர் கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியானது. அதற்கடுத்து சில மாதங்களிலேயே இப்படம் வெளியாகும் என்றார்கள்.
ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என கடந்து போய் இந்த வருட தமிழ் வருடப் பிறப்பிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலை முன்னிட்டு அதுவும் தள்ளிப் போனது. கடைசியாக மே 15ம் தேதி இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.
இப்படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவற்றிற்கான வியாபாரம் கடந்த சில மாதங்களாகவே இழுபறியாக இருந்தது. அதை முடிவு செய்யாமல் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் விரும்பவில்லை என்றார்கள். தற்போது அதுவும் முடிந்துவிட்டதாம். படத்தின் பட்ஜெட்டில் பாதியளவு அந்த உரிமையிலேயே வந்துவிடும் என்று தகவல்.
ஏப்ரல் 23 தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. ஏப்ரல் 30ம் தேதி தனுஷின் "கர" வெளியாக உள்ளது. அதனால், மே 15ம் தேதி சரியான தேதியாக இருக்கும் என முடிவு செய்துள்ளார்களாம். சூர்யா ரசிகர்களின் இத்தனை மாத காத்திருப்புக்கு "கருப்பு" ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!