
கார்த்தியின் கைதி- 2 படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது!
மே 29, 2025
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில், கடந்த 2019ம் ஆண்டு திரைக்கு வந்த படம் "கைதி". இப்படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரீஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ரஜினியின் "கூலி" படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருபவர், வருகிற டிசம்பர் மாதம் "கைதி-2" படத்தின் படப்பிடிப்பை தொடங்கப் போகிறார்.
தற்போது "சர்தார்-2" படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட கார்த்தி, அதன்பிறகு "டாணாக்காரன்" படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். டிசம்பர் மாதத்துக்குள் அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு, அதையடுத்து கைதி- 2வில் நடிக்கப் போகிறார். மேலும், தற்போது கைதி-2 படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!