பிடித்த நாவல், விருப்ப உணவு பட்டியலை வெளியிட்ட ருக்மணி வசந்த்
ஜூலை 07, 2026
Advertisement
யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படம் இந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளார் ருக்மணி வசந்த். இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரோஷி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இதுமட்டுமின்றி, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் டிராகன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ருக்மணி வசந்த்.
இப்படி படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும், தனது தனிப்பட்ட சந்தோஷங்களுக்காக ருக்மிணி நேரம் ஒதுக்க தவறுவதில்லை. இன்ஸ்டாகிராமில் தனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களின் பட்டியலை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட மின் ஜின் லீ எழுதிய பச்சிங்கோ என்ற வரலாற்று நாவலை தான் தற்போது படித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உணவைப் பொறுத்தவரை, இட்லி, பாஸ்தா, ரொட்டி ஆகியவை எனது தற்போதைய எனது தினசரி உணவில் எடுத்துக் கொள்கிறேன்.
செர்ரி, பெர்ரி, கிவி மற்றும் டிராகன் புரூட் போன்ற பழங்களுடன் ஐஸ்கிரீம்கள் மற்றும் பிளாக் காபியையும் ரசித்து சாப்பிடுவேன். இந்த உணவுகளை உட்கொண்டாலும், உடற்தகுதியிலும் அக்கறை காட்டி வருகிறேன் என்று கூறியுள்ள ருக்மணி வசந்த், ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!