
கர: அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ்
மே 06, 2026
Advertisement
2023ல் வெளிவந்த "போர் தொழில்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. அவரது அடுத்த படமாக தனுஷ் நடிக்கும் "கர" படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
படம் வெளிவருவதற்கு முன்பு இப்படம் பற்றி பயங்கரமான பில்டப் கொடுத்தார்கள். ஆனால், படம் வெளிவந்த பின்பு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.
ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல் மெதுவான திரைக்கதையுடன் "ரா"வான ஒரு படமாக இருந்தது. தேர்தல் முடிவுகள் என பரபரப்பு கடந்த சில நாட்களாக இருந்ததால் தியேட்டர்கள் பக்கமும் கூட்டமில்லை. அதனால், இந்தப் படம் தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் சுமார் 40 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடித்து கடந்த வருடம் வெளியான "குபேரா, இட்லி கடை" ஆகியவை தோல்வியை சந்தித்த நிலையில் அந்த வரிசையில் இந்த "கர" படமும் இணைகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!