100 மில்லியன் பார்வைகளைக் கடந்த கனிமா
ஆக 06, 2025
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விவேக் எழுதி, சந்தோஷ் நாராயணன், தி இந்தியன் கோரல் என்சம்பிள் குழு உடன் இணைந்து பாடிய "ரெட்ரோ" படப் பாடல் "கனிமா". இந்தப் பாடல் வெளியானதுமே உடனடியாக ஹிட் ஆனது. பாடலில் இடம் பெற்ற சூர்யா, பூஜா ஹெக்டே, சந்தோஷ் நாராயணன் ஆகியோரது நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து எண்ணற்ற ரீல்ஸ்கள் இப்பாடலை வைத்து உருவாக்கப்பட்டது.
மார்ச் 21ம் தேதி யு டியுப் தளத்தில் இதன் லிரிக் வீடியோ பாடல் வெளியானது. அப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான பாடலின் முழு வீடியோ 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் இதற்கு முன்பு "ஜகமே தந்திரம்" படத்தின் "புஜ்ஜி" பாடல், "ரகிட ரகிட" ஆகிய பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!