
கூலி டைம் டிராவல் கதையா.?
இது குறித்து லோகேசிடம் கேட்டபோது, ‛‛நானும் இப்படிப்பட்ட கதைகளை படித்தேன். ஆனால், படம் ரிலீஸ் ஆனபின் ஆச்சரியம் இருக்கிறது"" என பதில் அளித்துள்ளார்.
கதைப்படி சத்யராஜ் ஒரு கடிகார பேக்டரியில் வேலை செய்கிறார். அவர் சில ஆராய்ச்சி செய்கிறார். டைம் டிராவல் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை கைப்பற்ற போட்டி என்று கூறப்படுகிறது.
இதற்குமுன்பு வெங்கட் பிரபுவின் ‛மாநாடு", சூர்யா நடித்த ‛24", விஷ்ணு விஷால் நடித்த ‛இன்று நேற்று நாளை", சந்தானம் நடித்த ‛டிக்கிலோனா", விஷால் நடித்த ‛மார்க் ஆண்டனி" மற்றும் ‛ஜாங்கோ" போன்ற படங்கள் தமிழில் டைம் டிராவல் சப்ஜெக்ட்டில் வந்துள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!