
கங்குவா பட வழக்கு முடிவு : படம் திட்டமிட்டபடி வரும்...
இதனிடையே, இப்படத்தை வெளியிடத் தடை கோரி ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. தங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையான 55 கோடி ரூபாய் பணத்தை ஆகஸ்ட் மாதம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இன்னும் தரவில்லை. அதைத் தராமல் "கங்குவா" படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தரப்பில் இன்றைக்குள் அந்தத் தொகையைத் தந்துவிடுவதாக உத்தரவாதம் தரப்பட்டது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அந்தத் தொகையை செலுத்தி விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
எனவே, படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை.
இதனிடையே கங்குவா படத்திற்கு தணிக்கை குழுவில் யு/ஏ சான்று கிடைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!