விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கங்கனா
ஜூலை 19, 2023
Advertisement
நடிகை கங்கனா ஹிந்தியில் பிஸியாக நடித்து வந்தாலும் தலைவி படத்திற்கு பின் தமிழ் படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் பி வாசு இயக்கத்தில் ‛சந்திரமுகி 2" படத்தில் நடித்துள்ளார். செப்., 15ல் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தமிழில் ஒரு முக்கிய நட்சத்திரம், ஹிந்தியில் ஒரு பிரபலம் இணைந்து நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது இந்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை மலையாள இயக்குனர் விபின் இயக்குகிறார். இதில் முதல் முறையாக விஜய் சேதுபதி, கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கின்றனர். திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!