
புஷ்பா; பார்த்து ரசித்த கமல்ஹாசன்
தெலுங்கில் தயாரான இப்படம், தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதன்பிறகே பல சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசனும் தற்போதுதான் இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துள்ளார். அது பற்றிய தகவலை படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் வெளியிட்டுள்ளார். “நேரம் ஒதுக்கி, புஷ்பா படத்தைப் பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர் சார். எங்கள் அனைவரின் வேலை குறித்து அன்பான வார்த்தைகளைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி,” என கமல்ஹாசன் படம் பார்க்கும் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
"புஷ்பா" படத்தைப் பார்த்துப் பாராட்டிய கமல்ஹாசனுக்கு படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!