
கல்கி 2898 எடி - முதல் நாள் வசூல், முதல் கட்டத் தகவல்
ஜூன் 28, 2024
Advertisement
பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான "கல்கி 2898 எடி" நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்காவில் முதல் நாள் முன்பதிவு, இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடந்தது.
நேற்றைய முதல் நாள் வசூல் 5 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துள்ளது. பிரிமியர் காட்சிகள் மூலம் மட்டும் சுமார் 3.8 டாலர் கிடைத்துள்ளது. பிரிமியர் காட்சிகள் மூலம் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. "ஆர்ஆர்ஆர்" படத்தின் பிரிமியர் காட்சி வசூலை இப்படம் முறியடித்து சாதனை புரிந்துள்ளது.
உலக அளவில் இப்படம் முதல் நாளில் சுமார் 180 கோடி வசூலித்திருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 115 கோடி, வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என்கிறார்கள். முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் "ஆர்ஆர்ஆர்" படம் 220 கோடி, "பாகுபலி 2" படம் 215 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அந்த வரிசையில் "கல்கி 2898 எடி" படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!