கல்கி 2898 ஏடி - வேகமெடுக்கும் அமெரிக்கா முன்பதிவு
ஜூன் 12, 2024
Advertisement
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் "கல்கி 2898 ஏடி" படம் உலக அளவில் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
தெலுங்குப் படங்களுக்கு அமெரிக்காவில் எப்போதுமே அதிக வரவேற்பு இருக்கும். அங்கு தெலுங்கு மக்கள் அதிகம் வசிப்பதே அதற்குக் காரணம். "பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்" ஆகிய படங்கள் அங்கு பெரிய வசூலைக் குவித்தன. அவற்றிற்குப் பிறகு "கல்கி 2898 ஏடி" படம் அதிக வசூலைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பட வெளியீட்டிற்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் முன்பதிவில் மட்டும் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலாகியுள்ளது. இதை அங்கு படத்தை வெளியிடும் பிரத்யங்கரா சினிமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் நாட்கள் உள்ளதால் முன்பதிவு வசூல் இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!