எப்படி இருந்த சரண்யா, இப்படி ஆயிட்டாரே...
ஜூன் 20, 2024
Advertisement
பூர்வீகம் தெலுங்கு என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சரண்யா. பள்ளியில் படிக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் "காதல்" படத்தில் பரத் ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். கடைசி நேரத்தில் சந்தியா தேர்வு செய்யப்பட்டதால், சந்தியாவின் தோழியாக நடித்தார்.
அதன்பிறகு பேராண்மை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைக்காலம், ரெட்ட வாலு உள்பட பல படங்களில் நடித்தார், கடைசியாக 10 வருடங்களுக்கு முன்பு "முயல்" என்ற படத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்கதில் தனது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடல் எடை கூடி தலையில் மொட்டை அடித்து காட்சி அளிக்கிறார். ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட சரண்யாவின் முக்கிய பணியே கோவில்களுக்கு செல்வதுதான், அந்த வகையில் ஒரு நேர்த்தி கடனுக்காக அவர் மொட்டை போட்டுள்ளார். அன்றைய தினம் அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!