கணவர் இறந்த 3வது வாரத்திலேயே இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மனைவியும் மறைவு
பிப் 27, 2023
Advertisement
தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் கடந்த பிப்ரவரி 2ம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும், குறிப்பாக நடிகர் கமல்ஹாசனை வைத்து தொடர்ந்து பல விருது பெற்ற படங்களை இயக்கியவர் கே விஸ்வநாத். 92 வயதான அவருக்கு 88 வயதில் ஜெயலட்சுமி என்கிற மனைவி இருந்தார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கே.விஸ்வநாத் இறந்து 24 நாட்களே ஆகியுள்ள நிலையில் நேற்று இரவு அவரது மனைவி ஜெயலட்சுமியும் உடல்நல குறைவு காரணமாக காலமானார். தொடர்ந்து இப்படி இரண்டு மூத்த குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளது அவர்கள் குடும்பத்தில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் கூட சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!