அக்., 10 முதல் டிராகன் படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆர்
செப் 28, 2026
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படம் டிராகன். ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதையடுத்து சுமார் இரண்டு மாதங்கள் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அக்டோபர் 10ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தயாராகியுள்ளார்.
டிராகன் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ளது. படக்குழுவினர் அக்டோபர் 10 அன்று படப்பிடிப்பைத் தொடங்கி, 15 நாட்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த மும்பை படப்பிடிப்பில் முக்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதில் என்.டி.ஆர் மற்றும் அனில் கபூர் இணைந்து நடிக்கும் முக்கியக் காட்சிகளும் இடம்பெறும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் டிராகன் படத்தை 2027 ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!