
தர்மன் அப்டேட்: ரஜினி உடன் 6வது முறையாக இணைந்த நயன்தாரா
அக் 26, 2026
Advertisement
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர் 2" படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. அடுத்து "டிராகன்" இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "தர்மன்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
சிம்ரன், ராஷி கண்ணா, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் "தர்மன்" படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் ரஜினியுடன் "சந்திரமுகி, சிவாஜி (ஒரு பாடல்), குசேலன், தர்பார் மற்றும் அண்ணாத்த" ஆகிய ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது 6வது முறையாக இணைந்துள்ளார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!