
சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி
ஜூன் 29, 2022
Advertisement
விஜய் டிவியின் நடிகர்கள் பலரும் விரைவிலேயே சினிமாவிலோ, சீரியலிலோ நடிகர்களாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் மரியானா ஜூலி. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு கெட்டபெயரை வாங்கி வெளியேறிய ஜூலி, கடைசியாக நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார். தற்போது ஜூலிக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், ஜூலி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான "தவமாய் தவமிருந்து" என்ற சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான ப்ரோமோ ரிலீஸாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஜூலிக்கு எதிர்காலத்தில் டிவி சீரியல் கண்டிப்பாக ஒரு ஆப்ஷனாக இருக்கும்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!