
ஜூனியர் என். டி. ஆர் 30வது படத்தின் தலைப்பு இதோ
மே 17, 2023
Advertisement
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சைப் அலி கான் நடிக்கிறார். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வருகின்ற மே 20ல் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தேவாரா என்று தலைப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!