புதிய அவதாரம் எடுக்கும் ஜித்தன் ரமேஷ்
ஜன 03, 2023
Advertisement
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மூத்த மகன் ரமேஷ். ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானதால் ஜித்தன் ரமேஷ் ஆனார். அந்த படத்திற்கு பிறகு மது, ஜெர்ரி, நீ வேணுன்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் கோவில் தெரு கடைசி வீடு, உள்பட பல படங்களில் நடித்தார், ஒஸ்தி, ஜில்லா, படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு உங்கள போடணும் சார் என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு படம் எதிலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது "ரூட் நம்பர் 17" என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவரது தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் அகோரி போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறார். இந்த படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்குகிறார், பிரசாந்த் பரணவன் ஒளிப்பதிவு செய்கிறார், அவுஸ்பச்சன் இசை அமைக்கிறார். நீனி புரொடக்ஷன் தயாரிக்கிறது. 4 வருட இடைவெளிக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் இந்த படத்தில் புதிய அவதாரம் எடுக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!