7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஜில்லா இயக்குனர்
ஜன 23, 2021
Advertisement
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்த படம் "ஜில்லா". அப்படத்தை ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். அப்படத்திற்குப் பிறகு இதுவரை வேறு படம் எதுவும் இயக்கும் வாய்ப்பு நேசனுக்குக் கிடைக்கவில்லை.
தற்போது தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிக்க உள்ள புதிய படத்திற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் நேசன். ராமிற்குக் கதை பிடித்தால் அப்படத்தை நேசன் இயக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த "ரெட்" படம் வியாபார ரீதியாக வசூலைக் கொடுத்து வருகிறது.
ஆர்.டி. நேசனைப் போலவே விஜய் நடித்த “வேட்டைக்காரன், சுறா, புலி, பைரவா” படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு அடுத்த பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.
இவர்களில் "வேட்டைக்காரன்" படத்தை இயக்கிய பாபு சிவன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இயற்கை எய்தினார். "சுறா" படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் அடுத்து இயக்கிய இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் ஓடவேயில்லை. "புலி" படத்தை இயக்கிய சிம்புதேவன் "கசடதபற" என்ற படத்தை இரண்டு வருடங்களாக இயக்கி வருகிறார். , "பைரவா" படத்தை இயக்கிய பரதன் அடுத்த பட வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார். விஜய் நடித்த "அழகிய தமிழ் மகன்" படத்தை இயக்கிய பரதனை மீண்டும் அழைத்து "பைரவா" வாய்ப்பைத் தந்தார் விஜய்.
ஆனால், மேலே குறிப்பிட்ட மற்ற இயக்குனர்களுக்கு மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை அவர் தரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!