
பெத்திக்கு பின் ரூட்டை மாற்றிய ஜான்வி கபூர்
பாலிவுட் திரையுலகிலும் கூட, ஜான்வி அடுத்தடுத்த படங்களில் வேகமாக ஒப்பந்தமாவதில்லை என்று தெரிகிறது. தனது திரையுலகப் பயணத்தின் அடுத்த கட்டத்தைக் கவனமாகத் திட்டமிட்டு வரும் அவர், வழக்கமான கவர்ச்சி மற்றும் வணிக ரீதியான கதாபாத்திரங்களைத் தாண்டி யோசித்து வருகிறார்.
தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில், வலுவான கதைக்களம் கொண்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் தன்னை தேடி வந்த சில கிளாமர் ஹீரோயின் கதைகளை தவிர்த்து விட்டு, அழுத்தமான நடிப்பை பதிவு செய்யக்கூடிய கதைகளுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறாராம்.
அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தில் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகியிருப்பதாகச் செய்திகள் வெளியானபோதும் படக்குழு அது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!