25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம்
ஜூலை 08, 2025
Advertisement
மலையாள திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். சமீப வருடங்களாக தன்னை குணச்சித்ர நடிகராக மாற்றிக் கொண்டு மலையாளம் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சில படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது ஜெயராம், அவரது மகன் காளிதாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் ‛ஆசைகள் ஆயிரம்" என்கிற படம் தயாராகி வருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் காளிதாஸ் இதற்கு முன்னதாக 2000ல் ஜெயராம் நடிப்பில் வெளியான கொச்சு கொச்சு சந்தோசங்கள் என்கிற படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் ஜெயராமின் மகனாகவே நடித்திருந்தார். அந்த வகையில் 25 ஆண்டுகள் கழித்து தற்போது தனது தந்தையுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் காளிதாஸ். இதை ஜி பிரஜித் என்பவர் இயக்குகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையுடன் இணைந்து நடிக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் காளிதாஸ் ஜெயராம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!