சென்சார் சான்று உடன் ரிலீஸ் தேதியை அறிவித்த ‛ஜப்பான் படக்குழு
நவ 02, 2023
Advertisement
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 25வது படமாக நடித்துள்ள திரைப்படம் "ஜப்பான்". அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிரிம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தாலும் ரிலீஸ் தேதியை குறிப்பிடாமல் இருந்தனர். தற்போது இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் சென்சாரில் கிடைத்ததாக அறிவித்து கூடுதலாக இப்படம் நவம்பர் 10ம் தேதி அன்று வெளியாகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!