
முந்தைய சாதனைகளை முறியடிக்குமா ஜெயிலர் டிரைலர்
இப்படத்தின் பாடல்கள் வெளியான போதும், இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் "கழுகு, காக்கா" கதை சொல்லி பேசிய போதும் சர்ச்சை எழுந்தது. "சூப்பர் ஸ்டார்" பட்டத்திற்கு ஆசைப்படுபவர்களைப் பற்றி அவர் அப்படி பேசியிருந்தார். அது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று மாலை வெளியாக உள்ள டிரைலரில் ரஜினிக்கே உரிய "பன்ச்" வசனங்களுடன் டிரைலர் இருக்குமா என அவரது ரசிகர்களும், திரையுலகினரும் காத்திருக்கின்றனர். அது மட்டுமல்ல ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன்பு வெளியான "அண்ணாத்த, தர்பார்," படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் "ஜெயிலர்" மீதான எதிபார்ப்பு அதிகமாகவே உள்ளது.
விஜய், அஜித் படங்களின் டிரைலர்கள் யு டியூபில் எப்போதுமே போட்டி போட்டுக் கொண்டு சாதனை படைக்கும். அந்த சாதனைகளின் உச்சத்தில் விஜய், அஜித் ஆகியோர்தான் இருக்கிறார்கள். இந்த முறை அவற்றை உடைத்து "ஜெயிலர்" சாதனை படைக்குமா ?.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!