
ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு, கேக் வெட்டி கொண்டாட்டம்
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஹைதராபாத், கடலூர், ஜெய்சால்மர், மங்களூர், சாலக்குடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பை கடந்த மாதத் துவக்கத்தில் வெளியிட்டார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடந்து முடிந்துவிடும். ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன்பு 2021 தீபாவளிக்கு வெளிவந்த "அண்ணாத்த" படம் தோல்வியடைந்தது. சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு "ஜெயிலர்" வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!