
தேவர் மகனுக்குப் பிறகு எனக்கு அருமையான படம் : வடிவேலு
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சூரி, விஜய் ஆண்டனி, மிஷ்கின், எஸ்ஜே சூர்யா, வெற்றிமாறன், பிரதீப் ரங்கநாதன், போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய வடிவேலு : உங்கள் வீட்டுப் பிள்ளையான நான் இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் எல்லோர் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும். உதயநிதி நல்ல கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஏ ஆர் ரகஹ்மான் இசையில் பாடி இருக்கிறேன், நான் பாடவில்லை அவர்தான் என்னை பாட வைத்துள்ளார். நான் எங்கும் செல்லவில்லை எல்லா நேரமும் உங்கள் பாக்கெட்டில் செல்போனில் வந்து கொண்டு தான் இருக்கிறேன்.
இந்த நேரத்தில் மறைந்த என் தாயை நினைத்துப் பார்க்கிறேன். அருமையான கதைக்களம் இது, படம் நிச்சயம் வெற்றி பெறும். தேவர் மகன் படத்துக்கு பிறகு எனக்கு மிகப்பெரிய படமாக, குணச்சித்திர வேடம் நிறைந்த கதையாக அமைந்துள்ளது. சுயமரியாதை கலந்த கதாபாத்திரம், அரசியல் படம், புதுமையான படம். உதயநிதிக்கு இது கடைசி படம் என்று சொல்ல முடியாது. இவ்வளவு நாள் ஹீரோவாக நடித்தார், இனி அரசியலில் ஹீரோவாக போகிறார். மக்கள் பணியை செய்யப் போகிறார்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!